இருதய மோதிரம் - Tamil Short story

 முன் ஒரு காலத்தில் ,பல நூற்றாண்டுகளுக்கு  முன், செங்கோல்நகரம் என்ற7 ஊரை ஆட்சி செய்த வந்தான் சடையன் என்ற  மன்னன்.

ஒரு நாள் வழக்கம் போல அரசவை கூடியது 


தலைமை காவலாளி கூறினார் , மன்னா ஒரு நற்செய்தி , இளவரசியின் இருதய மோதிரத்தை திருடிய ஊமையன் மாட்டி கொண்டான் .

அப்படியா இழுத்து வாருங்கள் அவனை என்றார் மன்னர்.


சில நூறு பொதுமக்கள் , அனைத்து அமைச்சர்களும் கூடிய அந்த அரசவையில் , சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊமையன் இழுத்து வர பட்டான் . முட்டி  போட்டு அவனை அரசவையின் நடுவே அமர வைத்தார்கள் காவலாளிகள் .


இவனை எங்கு பிடித்தீர்கள் என்று கேட்டார் மன்னர்.

மன்னா , அவன் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை விட்டு தப்பிக்க நினைத்தவன் நமது ஊர் எல்லை  காவலாளிகளிடம் மாட்டி கொண்டான் .அவன் திருடிய இருதய மோதிரம் இதோ என்று மன்னர் முன் பணிவுடன் நடந்து சென்று அந்த மோதிரத்தை ஒப்படைத்தார் காவலாளி .


சங்கிலியால் பிணைக்கப்பட்டு முட்டி போட்டு தலை குனிந்து இருந்தான் ஊமையன் . மஹாராணியும், இளம் இளவரசியும் அரசவையின் இடதுபுறம் மன்னர் குடும்பம் அமரவுவதற்காகவே உருவாக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தார்கள் .


மோதிரத்தை வாங்கி உற்று நோக்கிய மன்னர் , இது தான் இளவரசியின் இருதய  மோதிரம் என்று உறுதி செய்தார் .


மன்னர் பேச தொடங்கினார்,அமைச்சர் பெருமக்களுக்கும் இங்கு கூடிய அனைத்து பொது மக்களுக்கும் எனது வணக்கங்கள்.


இளவரசியின் இருதய  மோதிரம் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே, இளவரசி தனது மனம் கவர்ந்த மற்றொரு ராஜாங்கத்தின் அரசனுக்கோ இல்லை இளவரசனுக்கோ இதை பரிசாக அளிப்பாள் , அதன் பொருள் இந்த மோதிரத்தை வைத்திருக்கும் அரசனே அந்த இளவரசியின் மணவாளன் என்று முடிவு எடுக்கப்பட்டு அவனுக்கு திருமணம் முடித்து வைக்கப்படும் . இதை நமது அரசாங்கத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்.


அந்த மோதிரத்தை திருடிய இந்த ஊமையன் கையும் களவுமாக மாட்டி கொண்டான் . இதோ அந்த மோதிரம் என்று அனைவர் முன்னிலையிலும் தனது கைகளை உயர்த்தி மோதிரத்தை காண்பித்தார் மன்னர் .இவனுக்கு தண்டனை கொடுப்பதே சரி என்று கூறிய மன்னர் . அமைச்சர்கள் தனது கருத்தை கூறலாம் என்று கூறி முடித்தார் மன்னர் .


தலை குனிந்த ஊமையனுக்கு கண்ணில் கண்ணீர் முட்டியது .


ஒரு மூத்த அமைச்சர் பேச தொடங்கினார் . யார் இந்த ஊமையன் இவன் எங்கிருந்து வந்தான் ? இவன்  தாய் தந்தை யார் ?, உற்றார் உறவினர் யார் ?

யாருக்குமே தெரியாது !!!.


பேச முடியாதவன் என்ற ஒரே காரணத்திற்காக கருணையுடன் அரண்மனை சேவகன் பனிக்கு அமர்த்தினோம்  சில வருடங்களுக்கு முன். ஆனால் இன்று இளவரசியின் மோதிரத்தையே திருடி உள்ளான் .


இவன் ஊமையனாக இருப்பதால் இவனது தரப்பு நியாயங்களை நாம் கேட்க  இயலாது , இருப்பினும் இருதய மோதிரத்துடன் கையும் களவுமாக மாட்டி கொண்டதால் . இவனுக்கு  தண்டனை கொடுப்பதே சரி என்பதே எனது கருத்தும் என்றார் அந்த அமைச்சர் .


இதை கேட்ட மன்னர், ஆகட்டும் .. இளவரசியின் இருதய மோதிரத்தை திருடிய குற்றத்திற்காக இவனுக்கு .. என்று மன்னர் கூறி முடிக்கும் முன் ஒரு குரல் மிகவும் சத்தமாக கேட்டது 


அது அந்த ஊமையன் குரல் .. ஒரு வேளை என்னால் பேச முடிந்தால் எனது தரப்பு நியாயங்களை நீங்கள் கேட்கலாம் அல்லவா என்று கூறினான் ஊமையன் .


அரசவையே அதிர்ச்சி ஆனது,மன்னர் உட்பட அங்கு இருந்த அமைச்சர்கள் மற்றும் மஹாராணி உட்பட பேரதிர்ச்சி  ஆனார்கள் .


ஊமையன் அருகில் சாட்டையுடன் நின்று இருந்த தலைமை காவலாளி மிகவும் ஆக்ரோசத்ததுடன் சத்தமாக கூறினார் .


மன்னா இவன் பேச தெரிந்தவன் !!!. இதுவரை ஊமையன் என்று கூறி நமது அனைவரையும் ஏமாற்றி உள்ளான், இதுவே சாட்சி இவன் திருடன் என்பதற்கும்.

ஊமையன் பேச தொடங்கினான், தனது எதிரில் இருந்த மன்னரின் கண்களை பார்த்து . ஒரு வேளை, இருதய மோதிரத்தை நான் திருடாமல் இளவரசியே எனக்கு பரிசாக அளித்திருந்தால் ? - என்று கேட்டான் ஊமையன்.


ஆத்திரம் அடைந்த மன்னர் , என்ன சொன்னாய் !!! எனது மகள் உன்னிடம் கவரப்பட்டு தனது இதயத்தை பறி கொடுத்தால் என்று கூறுகிறாயா!!!


சற்று பொறு மன்னா என்று மன்னரை சாந்தப்படுத்தினார் மூத்த அமைச்சர் .


இதை எல்லாம் உற்று நோக்கி கொண்டிருந்தார்கள் மஹாராணியும் அவர் அருகில் அமர்ந்திருந்த இளவரசியும் .

இளவரசியின் கலங்கிய கண்கள் கண்ணீரை சுவைக்க தொடங்கியது 


இதை கவனித்த ராணி , இளவரசி எழுந்து நின்று ஊமையன் கூறியது அனைத்தும் பொய் என்று கூறு !!!. - என்று கண்டிப்புடன் கூறினார் ராணி .

இளவரசியோ மேலும் கலக்கும் அடைந்து தலையை குனிந்தபடி அழ  தொடங்கினாள். 

மௌனமாக இருந்த இளவரசியை பார்த்து கோபம் அடைந்த ராணி , 

சட்டேனே எழுந்து நின்று கோபத்துடன் அரசவையை விட்டு வெளி நடப்பு செய்தார் .


ஊமையன் கொடுத்த அதிர்ச்சி இருந்த மீண்ட தலைமை காவலாளி .

என்ன திமிர் உனக்கு , இளவரசி மீது அவதூறு கூறுகிறாயா, தான் கையில் வைத்திருந்த சாட்டையை வைத்து பலமாக ஊமையனை அடித்தார்.


சாட்டை ஊமையன் இடுப்பில் பட்டு வலியால் துடித்தான் . அவன் வயிற்றில் கட்டி இருந்த இடுப்பு துண்டு டப் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.


அந்த துண்டு துணியில் எதையோ மறைத்து வைத்திருக்கிறான் என்று உணர்ந்த அந்த காவலாளி .துணியை கையில் எடுத்து திறந்தார் .

கருப்பு வண்ணத்தில் ஒரு கருவி,இது என்னவென்று  காவலாளிக்கு புரியவில்லை .


மன்னர் முன்பு அரசவையில் கைகளை தூக்கி அந்த கருவியை உயர்த்தி 

காண்பித்தார்,மன்னர் உட்பட எந்த ஒரு  அமைச்சருக்கும் அது என்ன கருவி என்றே புரியவில்லை .


என்னடா இது ?- என்று ஊமையனை பார்த்து மிரட்டினார் அந்த காவலாளி . அந்த கருவின் மேல் எழுத்து வடிவத்தில் எதோ கிறுக்கி இருந்தது.


கருவியை ஊமையனின் முகத்துக்கு நேராக காண்பித்து,இதில் என்ன எழுதி இருக்கிறதென்று படி  - என்றார் காவலாளி .


ஊமையன் படிக்கத் தொடங்கினான் ,டிஜிட்டல் கேமரா என்று படித்தான் .


அரசவையில் யாருக்குமே அவன் கூறியது புரியவில்லை  - மேலும் படி என்றார் அந்த காவலாளி 


A Solar powered device  என்று கூறி முடித்தான் ஊமையன்.


மன்னர் எழுந்து ஊமையன் அருகில் வந்தார்.

நீ ஒரு புரியாத புதிர் என்று கூறிய மன்னர் , இது என்ன கருவு என்று கேட்டார்.


ஊமையன் கூறினான் இந்த கருவியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் !!! நான் யார் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


சரி நீ யார் என்று கூறு - என்றார் மன்னர் .

நான் தான் .. என்று கூற ஆரம்பித்த அந்த அடுத்த நொடி ஊமையன் நெற்றியில் மின்னல் போல் இறங்கியது மஹாராணி விடுத்த அம்பு .


திகைத்து போன மன்னர் திரும்பி பார்த்தார் , அம்பு எய்திய கம்பீரமான வில்லுடன் நின்று இருந்தார் மஹாராணி 

ரத்த வெள்ளத்தில் இறந்து போனான் ஊமையன்.


இதை கண்ட இளவரசி அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றாள் , அவள் கண்கள் பெரிதாகின , அதிர்ச்சியில் அசைவின்றி நின்றாள் . தனது உடலை விட்டு உயிர் பிரிந்தது போல் காணப்பட்டால் இளவரசி.


அரசவையே ஆடிப்போனது . சற்று சலசலத்தது .

மஹாராணி !!! என்ன காரியம் செய்தாய்? இவனை என் கொன்றாய் ? - என்று கேட்டார் மன்னர் .


அமைச்சர் கூறுகையில் , மன்னர் விசாரணையில் இருக்கும் ஒரு கைதியை நீங்கள் கொன்றது ஒரு மாபெரும் தவறு என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் .

மஹாராணி பேச ஆரம்பித்தார் , சற்று பொறுமை அமைச்சரை , மன்னிக்கவும் மன்னா என்று பணிவுடன் கூறிய ராணி .

 இவன் ஒரு மாயாவி , இவன் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நம் ராஜ்யத்துக்கு ஆபத்து , அதனால் தான் அவனை கொன்றேன் - என்று பதில் கூறி முடித்தார் ராணி .


மன்னர் கேட்டார் , இவன் மாயாவி என்பதற்கு என்ன சாட்சி ?


சற்று மெல்லிய புன்னகையுடன் பேசிய மஹாராணி , இதோ இந்த கருவி தான் சாட்சி.

டிஜிட்டல் கேமரா என்று எழுதி இருந்த அந்த கருப்பு கருவியை கையில் எடுத்த மஹாராணி , அரசவையில் அனைவரும் காணும்படி கைகளை உயர்த்தி காட்டினார் .


மேலும் பேசிய மஹாராணி 

இதோ இங்கு மன்னர் இருக்கிறார் , அறிவார்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள் , கல்வியில் திளைத்த அறிஞர்கள் இருக்கிறார்கள் . இந்த கருப்பு கருவி என்னவென்று யாருக்காவது தெரியுமா ?, ஒருவராவது இந்த கருவின் பெயரை கூறட்டும் , நான் அவனை கொன்றது தவறு என்று ஒத்துக் கொள்கிறேன் .


முடியுமா ? - என்று சத்தமாக கேட்டார் மஹாராணி .

அரசவை அமைதியானது , அமைச்சர்களும் அறிஞர்களும் தலை குனிந்து நின்றனர் !!!


மன்னர் மஹாராணியை அதிர்ச்சியுடன் கண்டார் , மஹாராணியாரோ இளவரசியை கண்டார் .

இளவரசியின் கண்கள் குளமாக இருந்தது .தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் .

 

மஹாராணியின் பார்வையை பின் தொடர்ந்த மன்னர் , இளவரசி அழுவதை கண்டார்.மஹாராணியின் வில் இயந்தியதன் காரணமும் புரிந்தது .. சபை கலைந்தது ..


Comments