Posts

இருதய மோதிரம் - Tamil Short story

  முன் ஒரு காலத்தில் ,பல நூற்றாண்டுகளுக்கு  முன், செங்கோல்நகரம் என்ற7 ஊரை ஆட்சி செய்த வந்தான் சடையன் என்ற  மன்னன். ஒரு நாள் வழக்கம் போல அரசவை கூடியது  தலைமை காவலாளி கூறினார் , மன்னா ஒரு நற்செய்தி , இளவரசியின் இருதய மோதிரத்தை திருடிய ஊமையன் மாட்டி கொண்டான் . அப்படியா இழுத்து வாருங்கள் அவனை என்றார் மன்னர். சில நூறு பொதுமக்கள் , அனைத்து அமைச்சர்களும் கூடிய அந்த அரசவையில் , சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊமையன் இழுத்து வர பட்டான் . முட்டி  போட்டு அவனை அரசவையின் நடுவே அமர வைத்தார்கள் காவலாளிகள் . இவனை எங்கு பிடித்தீர்கள் என்று கேட்டார் மன்னர். மன்னா , அவன் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை விட்டு தப்பிக்க நினைத்தவன் நமது ஊர் எல்லை  காவலாளிகளிடம் மாட்டி கொண்டான் .அவன் திருடிய இருதய மோதிரம் இதோ என்று மன்னர் முன் பணிவுடன் நடந்து சென்று அந்த மோதிரத்தை ஒப்படைத்தார் காவலாளி . சங்கிலியால் பிணைக்கப்பட்டு முட்டி போட்டு தலை குனிந்து இருந்தான் ஊமையன் . மஹாராணியும், இளம் இளவரசியும் அரசவையின் இடதுபுறம் மன்னர் குடும்பம் அமரவுவதற்காகவே உருவாக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தார்கள் . மோதிரத்தை வாங்கி உற்று நோக்கிய மன்னர